உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்டென்மார்க் தலைநகரில் உள்ள ஸ்கூலகொல வழியில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த மூன்று ஆபிரிக்க நாட்டவர்கள் நேற்று நிலவிய குளிர் காரணமாக வீட்டுக்குள் கிறில் கரி அடுப்பை கொழுத்தி வீட்டை வெப்பமூட்டிவிட்டு ஆழ்ந்து உறங்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட நச்சுப்புகை காரணமாக இருவர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் இன்னொருவர் எந்த நாட்டவரென்று தெரியவில்லை. அதே அறையில் உறங்கி உயிர்தப்பிய இன்னொரு ஆபிரிக்கரை போலீசார் விசரித்து வருகிறார்கள். இவர்கள் இருந்த வீட்டின் கட்டிடம் மனிதர்கள் வாழாது நிராகரிக்கப்பட்ட பழைய கட்டிடமாகும். டென்மார்க்கில் சட்டரீதியாக வதிவிடம் பெறாத இவர்கள் யார் எதற்காக டென்மார்க் வந்தார்கள், இந்த அவல மரணத்தை அநியாயமாகத் தேடவேண்டிய தேவை என்னவென்ற விசாரணைகள் நடைபெறுகின்றன. இது இவ்விதமிருக்க நேற்று இளைஞன் ஒருவனுடைய சடலம் ஓகூஸ் ஏரியில் மிதந்தபடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் நேற்று றொஸ்கில நீதிமன்றில் நடைபெற்ற கொலை வழக்கொன்றில் 34 வயதுடைய சந்தேக நபர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் சூல்றொல் நகரில் 36 வயது மாஜி காதலியை கழுத்தைத் திருகிக் கொன்று காட்டில் வீசிய குற்றத்தில் இவர் கைதாகியிருந்தார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்