உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முருங்கன் – சிலாவத்துறை வீதியின் பரிகாரிகண்டல் நகரில் கெப் வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திவந்த பெண் உயிரிழந்துள்ளதோடு பின் அமர்ந்துவந்த பெண் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நந்தகுமார் ஜேசுவதனா என்ற பெண் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்