உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய நேரப்படி இன்று காலை 8.10 மணி அளவில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளவுத் துறை அதிகாரிகள்,ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் அநாதையாக நின்றிருந்த காரை பறிமுதல் செய்தனர்.

ஆனால், அதில் வந்ததாக சந்தேகப்படும் நபர்கள் தப்பிவிட்டனர். இதனால் அங்கே பரபரப்பு எழுந்துள்ளது. சந்தேகப்படும் மர்ம நபர்கள் அதிக அளவில் வந்திருக்கலாம் என்றும் அவர்கள் உடனே தப்பி விட்டதாகவும் கூறப்பட்டது.

அமெரிக்காவின் ஏபிஈசி மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் ஒபாமா கலிபோர்னியா வழியாக ஹவாய் தீவுகளுக்குச் சென்று கொண்டிருப்பதால்,இது வெள்ளை மாளிகையை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்