உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை வழங்க தைவான் அரசு முடிவு செய்துள்ளது.
தைவானில் வயதான பெற்றோரை கவனிக்காமல் மகன் அல்லது மகள்கள் கைவிடுவதாக ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆண்டுதோறும் 65 வயதுக்கு அதிகமான 2,000க்கும் மேற்பட்ட பெற்றோர் தைவானில் கைவிடப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

வயதான பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து பெற்றோரை கவனிக்காமல் ஒதுக்கும் மகன் அல்லது மகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் புதிய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெற்றோரின் மாத செலவுக்கு சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை ஒதுக்குவது அல்லது முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் பெற்றோரின் பராமரிப்புக்கு ஒரு பெருந்தொகை வைப்பு நிதியாக வழங்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட்டு சட்டம் அமலுக்கு வரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லாய் ஷிபோ தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்