உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்துருக்கியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கியதால் பீதி ஏற்பட்டது. துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள வான் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் குலுங்கியது. அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர். அதிர்ச்சியில் உறைந்த மக்கள் நிலநடுக்கம் என்பதை அறிந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக காண்புலி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக 2 முறை சிறிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மொல்ல காசிம் என்ற கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் உயிர் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த மாதம் இதே வான் மாகாணத்தில் 7.2 ரிக்டர், 5.7 ரிக்டர் அளவுகளில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 644 பேர் பலியாகினர். சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். 2 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்