Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவுடன் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ள இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி இன்றைய பேச்சுவார்த்தையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கூட்டமைப்பு அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கான அரசின் பதில் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, அரசாங்கத் தரப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோல் கலந்துகொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்