உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தங்கம் என்று கூறி தங்க முலாம் பூசப்பட்ட உலோக துண்டுளை விற்பனை செய்த ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தங்க முலாம் பூசப்பட்ட 955 கிராம் நிறையடைய உலோக துண்டுளை ஆறு இலட்ச ரூபாவிற்கு காத்தான்குடியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளனர்.

போலி நகைளை கொள்ளவனவு செய்த நபர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்டையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை சோதனையிட்​ட போது தங்க முலாம் பூசப்பட்ட மேலும் இரண்டு கிலோகிராம் உலோக துண்டுகளும் சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்ளை இன்று பொலன்னறுவை மாவட்ட நீதவான் முன்னலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்