உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கல்முனை – காரைதீவு பிரதான வீதியிலுள்ள கல்முனைக்குடியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எம்.அர்ஷாத் என அடையாளம் காணப்பட்டுளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சடலம் தற்போது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

கல்முனையிவிருந்து காரைதீவை நோக்கி பயணித்த லொறி, வீதிக்கு குறுக்காகச் சென்ற செங்கல் ஏற்றிய டிப்பர் ரக லொறியுடன் மோதுண்டதன் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் லொறி உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்