உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ் நகர் அத்தியடி அம்பலவாணர் வீதியில் வாள் கத்தி ஆயுதங்களுடன் வீடு புகுந்த நால்வர் நகைகள் பணம் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர்.
நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கூரை வழியாக நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களின் கைகளைக் கட்டி விட்டு இந்த இத் துணிகர கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் ரொக்கப்பணம் 5000ம் ரூபா கைத்தொலைபேசி போன்றன கொள்ளையிடப்பட்டது என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமது மனைவியிடம் இருந்த நகைகளை அபகரித்த கொள்ளையர்கள் மற்றைய நகைகள் எங்கே என்று கேட்டு அச்சுறுத்தியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்