Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கனடா தனது எல்லைப்பகுதியில் புதிய கட்டுப்பாட்டுகளை அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்ட பின் கடல், வான், தரை வழியாக வரும் எந்தப் பயணியும் அமெரிக்காவைச் சேர்ந்த எல்லைக் காவல் படையினரால் சோதனை செய்யப்பட்ட பின்பு தான் கனடாவின் எல்லைப்பகுதியைக் கடக்க முடியும்.

இதற்காக 32 அம்ச எல்லைக் காவல் திட்டம் தயாராகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அடுத்தவாரம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பெரும் கையெழுத்திடவுள்ளனர்.

இந்தத் திட்டம் குறித்துப் பேசிய கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெய்ர்டு, கனடாவைச் சேர்ந்த எந்த நபரும் அமெரிக்கா போக வேண்டும் என்றால், வீட்டு முகவரி, பிறந்த நாள், கடவுச் சீட்டு விபரம், பயண விபரம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இந்த 32 அம்சத் திட்டம் எல்லைச் சோதனை தவிர வேறு சில அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்