உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மன்னார் – பள்ளிமுனை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றை பரிசோதித்த பொலிஸார் அதிலிருந்து 40 கிலோ கஞ்சாவை நேற்று (30) கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பெறப்பட்ட தகவலை கொண்டு நான்கு ரெஜிபோம் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் குப்பிகளுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (01) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்