உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்கக் கட்டிகளை கொண்டு செல்ல முற்பட்ட கணவன்-மனைவியை கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றான.

இந்தியாவுக்குச் செல்லத் தயாராகவிருந்த மேற்படி இருவர் மீதும் சந்தேகம் கொண்ட விமான நிலையச் சுங்க அதிகாரிகள் அவர்களுடைய கைப்பையைச் சோதனையிட்ட போது அதில் 29 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் இருந்துள்ளன.

இவ்விருவரும் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இருவரையும் விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் குறித்த தங்கக் கட்டிகளை அரசுடைமை ஆக்கியதுடன் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்