Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்குச் செல்ல முற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் இந்திய திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அக்பர்லேக் பகுதியை சேர்ந்தவர் முகமது சரீப். இவரது மகன் முகமது சப்ராப் (வயது 26). இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழரான இவர் துணி வியாபாரமும் செய்து வருகிறார். வியாபார சம்பந்தமாக இவர் அடிக்கடி தமிழகத்திற்கு சென்று வருவார்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்த இவர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் தமிழகத்திலேயே தங்கி விட்டார். விசா முடிந்த பின்னர் அவர் சொந்த ஊருக்கு செல்வதற்கு மாநகர பொலிஸ் கமிஷ்னரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே அவர் முறையாக இலங்கைக்கு திரும்பி செல்ல முடியும்.

ஆனால் முகமது சப்ராப் இவ்வாறு முறையாக செய்யாமல் இலங்கையில் உள்ள ஒரு முகவரை தொடர்பு கொண்டு புதிதாக ஒரு போலி கடவுச் சீட்டை தயார் செய்து இலங்கையில் இருந்து சென்னை வழியாக தமிழகத்திற்கு வந்தது போன்று போலியாக ஒரு முத்திரையையும் பதித்துள்ளார்.

இந்த போலி கடவுச் சீட்டை வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் தனியார் விமானம் மூலம் அவர் இலங்கைக்கு செல்ல முயன்றார்.

அப்போது விமான நிலைய குடிவரவு துணை பொலிஸ் அதிகாரி ஸ்ரீதர் அவரது கடவுச் சீட்டை வாங்கி ஆய்வு செய்தபோது மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது.

இதனையடுத்து முகமது சப்ராப்பை அருகில் உள்ள விமான நிலைய பொலிஸில் அவர் ஒப்படைத்தார். இதுகுறித்து விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி பால்சாமி வழக்கு பதிவு செய்து முகமது சப்ராப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்