உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்காணித்தகராறில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ள கோரச்சம்பவமொன்று கோப்பாய் பொலி ஸ் பிரிவுக்குட்பட்ட இராசவீதி, நீர்வேலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தினால் நீர்வேலிப்பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையமார்க்கண்டு உதயகுமார் மற்றும் அவருடைய மனைவியான 45 வயதுடைய உதயகுமார் வசந்திமாலா என்பவர்களே கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களுடைய மகன் காயமடைந்துள்ளார்.சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்பட வில்லையெனக் கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலியானப்பெண்ணின் சகோதரனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பலியானவர்களின் சடலங்கள் யாழ். வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர் யாழ். வைத்தியசாலையில் சிகிச் சைபெற்று வருவதுடன் மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ___

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்