Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலத்திலும், சாத்தாவோலைசிவன் ஆலயத்திலும் இரவு திருடர்கள் தம் கைவைசையக் காட்டியுள்ளனர். அங்கு பெய்யும் அடைமழையையும், காற்றுப் புசலையும் சாதகமாக்கி திருடர்கள் ஆலய கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர். பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தெற்கு வாசல் கதவை உடைத்து, உட் புகுந்து அதன்பின் மகாமண்டப தெற்கு வாசல் கதவை வெட்டி ஆலயத்திற்குள் நுளைந்திருப்பதாக அறிய முடிகின்றது. ஆலய மூலமூர்தியிலும், எழுந்தருளி மூர்த்தியிலும் அணியப் பெற்றிருந்த அம்பிகையின் நகைகள் சிலவும், முருகனின் வேலும், அம்பிகையின் வாளும் கழவுபோயுள்ளதாக முதற்கட்ட விசாரைனையில் தெரிய வருகின்றது, அத்துடன் ஆலயத்தில் மூல மூர்த்தி  அரக்கப்பட்டுயிருப்பதால் பிராயச்சித்த அபிஷேகம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஊரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சாத்தாவோலை சிவன் ஆலயத்திலும் திருடர் உட் புகுந்து சிவன்ஆலயத்தில் சாமி-சிலைகள் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விபரம் இதுவரை அறிய முடியவில்லை. இவ் இரு திருட்டு சம்பந்தமாக சங்கானைப் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
                                                                                                                                   ஊரில்யிருந்து ஊர்குருவி

28 Responses to “பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும், சாத்தாவோலை சிவன் ஆலயத்திலும் திருட்டு”

 • kunam:

  இங்கு நடக்கும் கருத்து மோதல்களை பார்க்கும் போது எனக்கும் எனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தொனுகுறது
  சாரி பிழைகள் இருந்தால் மண்னிக்கவும்
  1 . கருத்துக்கள் என்பது தனிமணித சுதந்திரம்
  2 . அதை ஒருவர் கூறும் போது அதற்க்கு எதிர் கருத்து உள்ளவர்கள் தாரளமாக இங்கே அவர்களது கருத்துக்களை வெளிஇடலாம்
  3 . சிறிலங்காவில் இருக்கும் ஆலயம்கள் அனேகமாக அரசாங்கத்தின் சொத்தாகவே இருக்குறது! உதாரணமாக நண்பர் நியாயம் சொல்லி இருகுரர்ர் அப்படி ஒண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்ல எண்டுறார் அப்படி ஒரு ஆலயத்துக்கு நங்கள் உதவி செய்தல் அதனால் பிரியோசனம் படுவது யார் அந்த ஆலயத்தில் இருக்கும் கடவுள இல்லை அந்த ஆலயத்துக்கு உரிமை கோருபவர்கள ? அந்த ஆலயத்தில் வரும் வருமானம் யாருடைய பொறுப்பு அந்த கடவுளின் பொறுப்பா இல்லை அந்த ஆலயத்தின் நிர்வகதிணற? தயவு செய்து இங்கு நாடாகும் கருது மோதல்களை தவிர்த்து இனி அங்க என்ன செய்யலாம் எண்டு ஆலோசிகலமே தவிர நடந்துமுடிந்தா துரவர்ச்ட்ட சம்பவங்களை மீண்டும் மீண்டும் இங்கு பேசுவது தவறு எனவே ஆலய நிர்வாகத்தினர் வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை உர்மக்களுககவும் சிலவளிகும் படி வேன்ன்டிகொல்ல்குறேன் நீங்கள் அதை செய்ய தவறும் பர்ச்சதில் இங்கு நடக்கும் கருத்து மோதல்கள் தொடரும்

 • Niyayam:

  வணக்கம் உறவுகளே…

  மனிதனாகிய நிஷாந்தன் வைத்த ஒரு கருத்தை வாசிக்கும் பொது மிகவும் நல்லாகா இருக்கிறது, அனால் அவருடைய இந்த 40 % நடைமுறையை நமது ஊரில உள்ள மற்றைய ஆலயங்களில நிறைவு செய்து அதன் மூலம் ஊரவர்கள் அடையும் நன்மையை தெரிவிக்கும் பொது அம்பாள் பக்தர்களாகிய நாங்களும் அம்பாள் ஆலையை தர்மகத்தாக்களிடம் வேண்டுகோளை வைக்கலாம்.
  அகவே நீங்கள் தெரிவித்த கருத்து எவ்வளவிற்கு சாத்தியப் படும் என்பதை தயவு செய்து நிருபணம் செய்து மக்களுக்கு தெரியப் படுத்திட்டு கருத்தை தெரிவிக்கவும். அதை விட்டிட்டு நடை முறைப் படாத விடயங்களை தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து. நான் அறிய இலங்கையில மட்டும் அல்ல எந்த நாட்டிலையும் இப்படி நடப்பதைக் கேள்விப் பட இல்லை.

  என்னுமொரு குறிப்பு.
  வீட்டில ஆக்கள் படுத்துக் கொண்டு இருக்கும் பொது திருடும் திருடர்களுக்கு, காவல் ஆளர் இல்லாத கோவிலில் திருடுவது என்பது என்னவோ உலகத்தில இப்ப மட்டும் தான் நடந்த மாதிரி விவாதம் நடக்கிறது. இதைப் பார்க்கும் பொழுது ஒரு சிலரின் மனதில எவ்வளவு தனிப்பட்ட கோபம் அம்பாள் ஆலையை தர்மகத்தாக்க்கள் மேல உள்ளது என்பது மட்டும் தெளிவாக உள்ளது.

  இதே இணைய தளத்தில முன்னொரு தடவை சாந்தை பிள்ளையார் கோவிலைப் பற்றி நடந்த விவாதம் தடை செய்யப் பட்டு இருந்த பொழுது கருத்து சுதந்திரம் பற்றி இப்ப கதைக்கிற இவர்கள் எல்லாம் அப்போ எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை……

  நன்றி உறவுகளே…
  நியாயம்

  • சாமானியன்:

   ஐயா நியாயவாதி….
   நீர் கேட்கும் மற்ற கோவில்கள் அரசாங்கத்தில் பொதுக் கோவில்கள் என்று பதியப்பட்டு இருக்கின்றது. பிள்ளையார் கோவில் உட்பட.இந்தக் கோவில்களின் உடமைகள் யாவும் பொதுச்சொத்து

   … காணாமல் போனது ஒன்றும் உங்கள் வீட்டு சொத்து அல்ல. பொது மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெறுமதிமிக்க தங்க நகைகள்.

   எங்கள் அம்மன் தாலி அறுத்தவர்களை பற்றி பொது இடத்தில் கதைக்காமல் உங்கள் வீட்டில் வந்தா கதைக்க முடியும்.தீருடர்கள் யார் என்பதை விரைவில் நிதிபதி முடிவு செய்வார்.

   • Niyayam:

    சாமானியன் அவர்களே…..
    அரசாங்கத்தின் பொதுக் கோவில்கள் தான் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக கோவிலில் வரும் ஒரு பகுதியை சமுகத்தின் வளர்ச்சிக்காக செலவு செய்து காட்டனும். அகவே நீங்கள் குறிப்பிடும் எமது உரில உள்ள பொதுக் கோவில்கள் இதுவரைக்கும் என்ன சமுக வளர்ச்சிக்காக செய்தவை என்று குறிப்பிட முடியுமா…
    திருடர்கள் யார் என்று நீதிபதி முடிவு எடுப்பது ஒரு சட்டம் கடைப்பிடிக்கப் படும் நாட்டின் ஒரு பகுதி செயல்பாடு…அப்படி என்றால் இணையத்தில பல நீதிபதிகள் வலம் வருகிறார்கள்….
    ஒரு விடயத்தைப் பற்றி கருத்து மாறுவது என்பது கூட அடிப்படை உரிமை தான், அனால் அதற்காக சும்மா நடக்காத பொய்களை எல்லாம் எழுதி ஊரின் ஒற்றுமையை குலைக்க நினைப்பதற்கு எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்பது என்னுடைய கருத்து….
    களவு போனது உண்மை, அனால் அதைப் பற்றி கதைப்பதை விட்டிட்டு இதில பல பெயர் கோவில் தர்மகத்தக்களின் குடும்ப தனிப்பட்ட விடயத்தை அல்லவே கதைக்கிறார்கள்…..
    உரில உள்ள எல்லாரும் பிச்சை எடுத்து வெளிநாடு வரலாம், அனால் அவர்கள் கோவிலில் கிடைக்கும் தட்சணையை வைத்து மட்டும் வெளிநாடு வரப்படாது. அதை அவர்கள் சாப்பிட தெரிந்தவர்களுக்கு நன்கொடை செய்யணும் போல…..
    எமது அயல் ஊரில எங்களின் நன்கொடைகளில் கூட கட்டிய பல கோவில்கள் இருக்கின்றது, அங்கெ போய் இதில் கதைக்கும் மனிதன் என்றவர்ந அல்லது மற்றது யாரவது எப்பயாவது அவருக்கு அந்த கோவிலில் என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டு உள்ளாரா…
    அகவே யாரும் உப்பு புளி இல்லாமல் கதைக்கும் விடயங்களை தவிர்ப்பது எல்லாருடைய வளர்ச்சிக்கும், அதாவது எமது சமுகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் துணையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
    நன்றி
    நியாயம்…

    • சாமானியன்:

     ஓம்…ஓம் உம்மைப் போல் சிலருக்கு இது ஒரு சம்பவம்… அதாவது ஊரில் நிகழும் நிகழ்வுகளில் பத்தோடு பதினொன்று….அம்மன் தாலி அவ்வளவு மலிந்த ஒன்று..

  • jegatheeswaran:

   சாந்தை சித்தி வினஜகர்ட்கு மக்கள் கருத்து தடை செய்யப் பட்டு இருந்தது நியாயம் அவர்களே

  • கமல்:

   வணக்கம் ,ஏன் வீண் விவாதங்கள் ,சாஸ்திரியாரிடம் மைபோட்டு பார்த்ததில களவு எடுத்தவர் தாடி வளர்த்த கவி உடுப்புக்காரனாம் ,அதில என்ன விஷயம் எண்டால் நம்மட ஊரில பெருகிவரும் போலி சாமிகளும் காவி உடுப்புதான் ,குருக்கள்மாரும் காவி உடுப்புத்தான் ஒட்டு மொத்தத்தில் கடவுள் பேரை சொல்லி ஏமாற்றும் ஆசாமிகளே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்

 • manithan:

  முக்கிய செய்திகள்:-

  மனிதன் என்ற புனைபெயர்ல கருத்துக்களை எழிதிய நிசாந்தன் அவர்களுக்கு லண்டனிலும் யேர்மன்னிலும் இருந்து தொலைபேசியில் மிரட்டல்ல்ல்ல் ………..

  எழிதியது தவறு என்று உணர்ந்து மண்ணிப்பு கேட்டது குற்ரமா…… அலருகிரார் நிசாந்தன்ன்ன் …….

 • Manitan:

  வணக்கம்

  நான் ஜெர்மனில இருந்து நிஷாந்தன் (இனஜத்தில் எனது புனபெஜர் மனிதன்) என்ற பேர்ல கருத்துகளை எழுதியிந்தேன்.கடந்த 14 -12 -11 அன்று பனிப்புலம் அம்மன் கோவிலில் நடந்த திருட்டுக்கு எனது கருத்துக்களை எளிதியிருந்தேன் அதில —–கோயில்ல வர்ற வருமானத்தில பிள்ளையள வெளிநாட்டுக்கு அனுபுறத——- என்ற என்னுடைய பிழையான கருத்துக்கு நான் …மன்னிப்பு கேட்டுகொல்றேன் ….!!!!!!!! அது மட்டுமே தவறான கருத்து ஆகுமே தவிர மற்ற விடயம் அனைத்தும் உண்மையும் நன்மையுமே .

  உதாரணம் :-
  கேட்டது…..
  கேட்டால் அது எங்கட கோயில் எங்கட வருமாணமாம் 🙁 …!

  நல்லது …..
  அந்த கோயில்ல வர்ற வருமானத்தை எடுத்து அதில 40 வீதம் அந்த வேதத்தில உள்ள மாதிரி உருக்ககே நல்ல விடையத்துக்கு சிலவளிக்கலம்தானே

  எனது கருத்து
  ஆலையம் என்பது எப்போது அது ஊர் மக்களால் ஒன்றுசேர்ந்து கட்டபடுதோ அது அப்போதே அந்த ஊர் மக்களுக்கு சொந்தம் ஆகிவிடுகிறது .அதுக்கு தனி ஒரு குடம்பம் உரிமை கூறுவது 🙁 நாகரிகம் அல்ல

  மிக மிக முக்கியம் :-
  நான் பயத்தில மன்னிப்பு கேட்ட்கிரன் என்று தவறாக நினைத்திட வேண்டாம் தவறான கருத்தை எளிதிவிட்டேன் என்று ஒரு குற்ற உணர்வினாலேயே மன்னிப்பை கேட்டிருந்தேன்.

  • T.J.குமார்:

   இவ்வளவு காலமும் அம்மன் சம்பாதித்தது 5 பவுண் நகைதான் அதையும் கழுத்தில ,

   காதில போடா விடாமல் கழற்றி கொண்டு போனவன் நல்லா இருப்பனோ,இது இண்டைக்கு நேற்று நடக்கிற விசயமில்லை ,காலம் காலமாக நடக்குது ,வரதட்சனை என்ற பெயரில் ஆணாதிக்கம் ஒருபக்கம் குறைந்து கொண்டு வர ,

   மறு பக்கம் குரு தட்சனை குருக்கள் மாரின் நடவடிக்கைகள் கூடிக்கொண்டு வருகுது குறிப்பாக கற்பூரசட்டி ஏற்றவும் காசு ,இறக்கவும் காசு எண்டால் என்ன செய்யலாம் ,மனிதன் என்ற பெயரில் அள்ளி வீசிய வார்த்தைகள் சிறப்பாக இருந்தது,கடைசியில் நீங்களும் இப்படி செய்வீர்கள் என்று நினைக்கவில்லை ,என்ன நடந்தது????? நல்லாத்தானே போய்க்கொண்டு இருந்தீர்கள்!!!!!!!!

 • வானம்பாடி:

  துன்பப்பர்ரவார்கள் எல்லாம் தங்கள் துன்பத்தை கடவுளுடம்.முறயிடுவார்கள் .அந்தத்தெய்வமே கலங்கி நின்றால் அந்தத்தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்லமுடியும்.ஆனால் ஒண்டு .வேலியே சில நேரங்கள்ள பயிர மேயுறதாம்.அப்பிடியெண்டால் ஏன் வேலி பயிர மேய்ஞ்சிராது

 • sivanantham.s.:

  வளர்ந்துகொண்டிருக்கும் கருத்து மோதல்களைப் பார்க்கும்போது, புலம்பெயர் வாழ் எமதூர் மக்கள் இன்றைய யாழ் மண்ணின் நிலைமைகளை எவ்வளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகிறது. எமதூர் மக்கள் நாட்டுக்கு நாடு ஊர் மக்கள் ஒன்றியங்களை உருவாக்கி ஊர் மக்கள் ஒற்றுமைக்காகவும், ஊர் அபிவிருத்திக்காகவும் உழைப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு விபத்துப்போல் நிகழ்ந்துவிட்ட ஆலயத் திருட்டினை புனைபெயர்களில் தத்தம் கசப்புணர்வுகளுக்கேற்றாற்போல் கருத்துக்கள் எழுதுவது நல்லதாகத் தெரியவில்லை. எமதூரவர் இணையங்கள் தற்போது பலவூர் மக்களாலும் பார்க்கப்படுகின்றது என்பதை பலரும் அறிந்து வைத்திருந்தும் இத்தகைய கசப்புணர்வுக் கருத்துக்கள் எழுதுவது எமதூர் மக்களுக்கு மட்டுமல்ல, ஊரவர் இணையங்களுக்கும் இழுக்கையே ஏற்படுத்தும்.
  * களவு எடுத்தவனுக்கு ஒரு நரகம்
  களவு கொடுத்தவனுக்கோ ஏழு நரகம்*
  என்ற மூதறிஞர் முதுமொழியை தங்கள் சிந்தனையில் முன்னிறுத்தி களவு பற்றிய கருத்துக்களை எழுதுங்கள்.
  நன்றி!

  • ஐயா சிவானந்தம் உங்கடை கவலை உங்களுக்கு.ஒன்றியங்கள் என்ற பெயரில் ஒன்று கூடி அவித்து உண்ணுவபர்கள் எந்தநாட்டு ஒன்றியங்கள் எண்டு எல்லா எமது மக்களுக்கும் புரியும்ப்பா. கோயில்லை களவு போனவிடயம் செய்தியாகும்.இதுக்கு கருத்தை எழுத வேண்டாம் எண்டு வேறை இணையங்கள் சில தடுத்தது இதற்க்கான காரணம் ஏன் என யோசியுங்கள். குற்றம் ஒண்டு இல்லை என்றால் கருத்துக்கள் எப்படி விரோதமாக வருமய்யா.கருத்துக்கு பயம் என்றால் எங்கேயோ ஒரு உறுத்தல் இருப்பதாய்தான் நாங்கள் நினைக்கதோன்றும்.ஏதோ நீங்கள் தான் _______ளி மாதிரியும் மற்றவர்கள் ———கள் மாதிரியும் எழுதுகிறீகளே. உங்கடை அம்மாள் பவர் எண்டால் ஏனய்யா உந்தக்களவு நடக்கவேண்டும்.முதல் உங்கடை நாட்டு ஒ———-களை ஊருக்கை உதவ நடத்தலாமெல்லோ. உள் ஓட்டை அடைக்காமல் மற்றவன் ஓட்டையளை பிறகு அடைக்கலாமய்யா. vairavar

   • sivanantham.s.:

    பல புனைபெயர்களுடன் வலம் வரும் வைரவரே!
    பண்கொம்.நெட்டிலே *ஆதங்கம்* என்ற பெயரில் உடனடியாக வந்து இதே கருத்தை வழங்கிய வைரவரே தங்கள் கருத்துக்கு நான் எழுதிய பதிலை இணையத்தில் தடை செய்துவிட்டு, அதே கருத்தினை *வைரவர்* என்று பெயர் மாற்றத்துடன் இந்த இணையத்தில் வழங்கியுள்ளீரே ஏனய்யா இந்தக் குளறுபடி உந்தனுக்கு! சொந்தப் பெயரில் வந்து இணையங்களில் கருத்துரைக்க நாதியற்ற வைரவரே! நீரா? மக்கள் தொண்டன்?
    நான் முதலில் தந்த அன்பான பதிலை இணையத்தில் இணைத்துவிட்டு மீண்டும் கருத்தினை வழங்கவும்.

    • sasi:

     தயவு செய்து வரைவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும்

     • sivanantham.s.:

      தம்பி சசி அவர்களே!

      தயவு செய்து வைரவர் கேள்விக்கு பதில் தருமாறு கேட்டுள்ளீர்கள். தங்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். மேற்படி, பைரவரின் கேள்வியானது முதலில் ஆதங்கம் என்ற பெயரில் பண் கொம் நெட்டில் கேட்கப்பட்டிருந்தது. தாங்களும் பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். நான் அந்த இணையத்தில் கேள்விக்கான பதிலை கவி நடையில் யாருடைய பெயரையோ, முகவரியையோ குறிப்பிடாது எழுதியிருந்தேன். ஆனால்,புனைபெயர்களில் வந்து பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழும் புலத்து மக்களை தத்தம் கசப்புணர்வுகளுக்கேற்றாற்போல் விமர்சிப்பவர்கள், தங்களை நான் ஏதோ அடையாளம் கண்டுவிட்டேனோ என்ற பயத்தினால், அதாவது * குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்களே* என்னும் முதுமொழிக்கமைவாக எனது கருத்தை தடை செய்துவிட்டு என்னை மக்களுக்கு கெட்டவனாகவும், தங்களை நல்லவர்களாகவும் மக்களுக்குக் காட்ட வேண்டுமென்ற நோக்கில் தமது பதிலை எழுதி விட்டு, வைரவர் என்ற பெயரில் உடனடியாக மேற்படி கேள்வியை இந்த இணையத்தில் மாற்றம் எதுவும் செய்யாது இணைத்துள்ளதை தாங்கள் பார்க்கவில்லையா? இந்த செயலானது எப்படியானது என நான் சொல்லாமலே எல்லோருக்கும் விளங்குமென எண்ணுகின்றேன்.

      எனினும், பண்கொம் இணையத்துக்கு இரண்டாவது தடவையாக எழுதிய பதிலையும் தடை செய்துள்ளார்கள். எனது கருத்துக்களை தடை செய்துவிட்டு நான் ஏதோ தனி நபர்களின் பெயர்,முகவரிகளைக் குறிப்பிட்டு எழுதியுள்ளேன் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. எனவே,மேற்படி வைரவரின் கேள்விக்கான விடையை வைரவரிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொள்வதே நல்லதாகும் என்பது எனது பணிவான கருத்தாகும். ஏனெனில் இந்த இணையத்தாரும் எனது பதிலைத் தடைசெய்துவிட்டால் தாங்கள் எனது பதிலைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுமல்லவா.

      என்னைப் பொறுத்த வரை, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்னும் அடிப்படை மனித வாழ்க்கைக்கான சுதந்திகரக்காற்றை சுவாசிக்க முடியாது பல்வேறு இன்னல்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலத்தில் வாழ்கின்ற மக்களைப் பற்றியோ, அல்லது அங்கு நிகழும் அசம்பாவித சம்பவங்களைப் பற்றியோ விமர்சிக்கின்ற தகுதி புலம்பெயர்ந்து வாழ்கின்ற யாருக்கும் இல்லை என்பது எனது பணிவான கருத்தாகும்.

      * நாதியற்றோர் நாச்சுழற்சிகள் என்றும் நன்மை பயக்காது
      நல் மக்களுடனான நந்நட்பே என்றும் நன்மை பயக்கும்!

      வாழ்க வையகம்! வாழ்க ஊர் மக்கள் வளமெலாம் சிறக்க!

  • துஷ்யந்தி:

   வணக்கம் சிவானந்தம் அண்ணை!!!
   நீங்கள் எவ்வளவு தான் எடுத்துக்கூறினாலும் அது கருத்து கூறுபவர்களுக்கு புரியப்போவதில்லை.. காரணம் அவர்களுக்கே தெரியும் தாங்கள் எழுதும் கருத்துக்கள் தவறானவை என்பது. அப்படி இல்லையென்றால் அவர்கள் தயங்காது சொந்தப்பெயரில் கருத்து தெரிவிப்பார்கள். உண்மையை உணர்த்த பல பெயர்கள் தேவையில்லை. பொய்யை உண்மையாக்கத் தான் பல பெயர்கள் தேவை. அதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆலயதிருட்டு என்பது இதுதான் முதல்முறை நடந்தது என்பது போல் தேவையற்ற விமர்சனங்கள் பல. இதற்கு முதலும் பல ஆலயங்களில் திருட்டு நடந்தேறியுள்ளது. இதில் அதிக விமர்சனங்கள் செய்வோர் தான் அம்மன் ஆலய மகோற்சவ காலங்களில் ஊருக்கும் போகிறார்கள்.

 • Ampaal Pakthan:

  சிறிய குறிப்பு

  சூரனை படைத்ததும் கடவுள் தான் அவனை அளித்ததும் கடவுள் தான் என்பதை தெரியாதது போல காட்டிக் கொண்டு பல பெயர் கருத்து தெரிவிக்கிறார்கள். ஒரு சிலரின் கருத்தை பார்க்கும் பொது இவர்களின் தூண்டுதலில் தான் திருட்டு நடந்ததோ என்று சந்தேகம் வருகிறது. ஆகவே இப்படி கொஞ்சக் காலமாக கருத்து தெரிபிப்பவர்களுக்கு அம்மாள் தன்னுடைய தேவையை தெரிய படுத்த செய்யும் திருவிளையாடல்கள்தான் இவை.
  நன்றி.

 • Manithan:

  அது சரி … விடப்பா விடப்பா ஊர் சனம் எல்லாம் காசு சேர்த்து கோயில் கட்டினால் ……… அதில வர்ற வருமானத்தில பிள்ளையள வெளிநாட்டுக்கு அனுபுறதும் வேற ….. கேட்டால் அது எங்கட கோயில் எங்கட வருமாணமாம் 🙁 …!
  இல்ல நான் என்ன கேக்கிறான் என்றால் அந்த கோயில்ல வர்ற வருமானத்தை எடுத்து அதில 40 வீதம் அந்த வேதத்தில உள்ள மாதிரி உருக்ககே நல்ல விடையத்துக்கு சிலவளிக்கலம்தானே……. இத கேட்டால் குடிச்சிட்டு உலர்ரன் குடிகார பசங்க எண்டு சொல்றாங்க. எதோ எங்கட ஊர் மக்கள் இங்க குளிரிலையும் புழுத்த பானையும் சாப்பிடு கஷ்டப்பட்டு வேலை செய்து அனுபிற காசில என்கட ஊர் முன்வர பிரயோசனமா இருக்கணும் அதுதான் என்னுடைய ஆதங்கம்.

  அரசன் அன்று அறுப்பான் கடவுள் நின்று அறுக்கும்
  அது போன மாதம்
  அரசன் அன்று அறுப்பான் கடவுளும் அன்றே அறுப்பான்
  அது இந்த மாதம்

  • thanga velu:

   தம்பி மனிதன் சரியாக சொன்னிங்கள்…..பிளான் பண்ணி செய்து போட்டு இருக்குரங்கள்……………எனி துவங்கு வங்கள் வெளினட்டில்லை ,வெளிநாட்டில் இருக்கிற நம்மா ஊர் மக்கள் ………………… எதை சொன்னாலும் தலை அட்டி கொண்டே இருக்குங்கள்

 • பலெர்மோ \த..சங்கர்:

  மண்டியிட்டேன் அழுதோம் தொழுதோம் கரம்கூப்பி கண்ணீர் மல்கிட என் வேண்டுதலை அவரிடம் தெரிவித்தோம்

  ஊரிலுள்ளோர் துயரமெல்லாம் அவருக்குத் தெரிகிறது

  என் கஷ்டம் மட்டும் அவர் கண்ணில்பட மாட்டே தா என்கின்றோம்

  என்னைப் பொருத்தவரை கடவுள் செவிடு குருடு இதயமே இல்லாத கற்சிலை

  என்று நாமும் நம்மில் பலரும் பல சமயங்களில் விரக்தியின் எல்லைக்கே சென்று அங்கலாய்க்கிறோம்

  இது சரியான அனுகு முறையா?

  மின்சார சக்தி மனிதனுக்கு பல விதத்திலும் பயன் தருகிறது.

  ஒரு இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து விசிறியாக சுத்துகிறது.

  வேறொரு இயந்திரத்திலோ நீரை இறைத்து தருகிறது.

  தண்ணீரை சூடாக்கவும், காற்றை குளிர வைக்கவும் மின்சாரம் பயன்படுகிறது.

  அதே போல தான் கடவுள்.

  அறிவை வேண்டும் போது கலைமகளாகவும்,சரஸ்வதியாகவும்

  செல்வத்தை வேண்டும் போது மலைமகளாகவும்,லைசுமியாகவும்

  வீரத்தை வேண்டும் போது மலைமகளாகவும் காட்சி தருகிறாள்.துர்கை யாகவும்

  பத்தி மட்டும் தந்தால் கடவுளின் பேரருளுக்கு இது தான் எல்லை என முடிவு கட்டியது போல ஆகிவிடும்.

  கடவுளின் கருணை எல்லையற்றது. அவரிடம் எது வேண்டுமென்றாலும் கேட்பதற்கு மனிதனுக்கு உரிமை உள்ளது.

  ஆனால் கேட்டதை எல்லாம் தந்து விட வேண்டுமென்ற அவசியம் கடவுளுக்கு கிடையாது.

  காரணம் அவர் கருணை நிரம்பியவர் மட்டுமல்ல அறிவு மயமானவரும் ஆகும்.

  எதை எப்போது தரவேண்டுமென்பது அவருக்கு நன்றாக தெரியும்.

  ஒரு குழந்தை பனிகாலத்தில் ஐஸ்கீம் கேட்டாலோ வெயில் காலத்தில் கம்பளி சட்டை கேட்டாலோ பொறுப்பான பெற்றோர்கள் கொடுத்து விட மாட்டார்கள். கடவுளும் அப்படி தான்……….. அன்பான உறவுகளே நகச்சுவக்கான கருத்து எழுதுவதற்கு இத்த தலைப்ப பவிக்கவேண்டம்

 • oru anuthabi:

  யாழ்பனதிஸ் கடைகளில் களவு .மக்களை காக்கும் கடவுள் இல்லத்திலும் களவு. நீதி,தர்மம் எல்லாம் செத்துபோச்சு.
  இந்த திருடனை கைது செய்ய ஸ்ரீலங்கா போலிசால் முடியாது. ஈஸ்கோட்லன்த்யாத் போலிஸ் வரவேண்டும். என்ன செய்வது? காரணம் கை அடையாளம் இருக்காது. இதட்ட்கு திருடனின் கால் சுவடு, தலை மயர், மாதிரி தேவை.

 • Ramya:

  கோவில் நிர்வாகத்தால் முடியாவிட்டால் கோவிலுக்கு ஒரு இரவுக்காப்பாளரை நியமிப்பது அவசியம்.. 🙁

  • சச்சி:

   எங்களை காப்பாற்ற கடவிளை உருவாக்கினோம்,இனி கடவிளை காப்பாற்ற காவலாளியை உருவாக்குவோம்.நல்லா இருக்கம்மா உங்கள் காவல் பிளான்.

 • இவேர ராமசாமி:

  தான் பொருள பாதுகாக்க முடியாத அம்மாள் எப்புடி நம்ம ஊர் சனத்த காப்பாத்த போகுது

 • panipulathan:

  திருடன் யாருமில்லை …………..தான்.இது எல்லாம் நீண்ட கதை.

 • கடவுள்:

  யார் இந்த திருடர்கள் … தெய்வத்தின் நகையில் கை வைத்தவர்களை அவர்களின் குடும்பங்களை கடவுள் சந்தோசமாக வாழ விடுமா என்ன. அரசன் அன்று அறுப்பான் கடவுள் !.. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  • thanga velu:

   தம்பி கடவுள் நான் தான் எடுதனன் என்ன செய்ய போரியல் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்