உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்புதையல் தோண்டி எடுத்த தங்க இளநீர் எனக்கூறி தங்க முலாம் பூசப்பட்ட இளநீரை சுமார் இரண்டரை கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கெக்கிராவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை – தொடங்கொட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலியான முறையில் தயாரிக்கப்பட்ட இளநீர் 193 கிரேம் 80 மில்லி கிரேம் நிறையுடையது எனவும் அதில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளநீர் காயை கொள்வனவு செய்ய எப்பாவெல பிரதேச வர்த்தகர் ஒருவர் இணங்கியதை அடுத்து கொடுக்கல் – வாங்கல் இடம்பெறவிருந்த இடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்