உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஈரமான நெஞ்சம் கொண்டார் ஈழவர் நெஞ்சில் நிறைந்தார். 17 -01 -1917 இல் இலங்கையின் நாவலப்பிட்டியில் மெனகத் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் பிறந்த மக்கள் திலகம்
எம் ஜி ஆர் 24 -12 -1987 இல் இவ்வுலக வாழ்கையிலிருந்து நீங்கிச்சென்றார் ஆனாலும் அவர் புகழ் இன்றும் நிலைத்திருக்கின்றது இனியும் நிலைக்கும் , அவர் நினைவாக சில மீட்டல்கள் புதிய வடிவில்.

இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய எம் ஜி ஆர் தந்தை சிறிது காலத்தால் காலமாகிவிட இளமை வாழ்வில் கொடிய வறுமையில் சிக்கி தவித்த எம் ஜி ஆ ர் தமிழகத்தின் கும்பகோணத்தில் தாயுடனும் அண்ணனுடனும் மாமனார் வீட்டில் தஞ்சமடைந்தார்.

தன்னையும் அண்ணனையும் வளர்க்க தாயார் கடுந்துன்பப்படுவதை நினைத்து இளவயதிலேயே மிகுந்த வருத்தம் கொண்டார் தாயாரின் சுமையை குறைக்க எண்ணி அவ்வூரில் இருந்த நாடகசபாவில் அண்ணனும் தம்பியும் இணைந்து நடித்தார்கள் ,சாப்பாடும் போட்டு துணிகளும் கொடுத்து கிழமைக்கு 25 சதத்தை சம்பளமுமாக நாடகசபா கொடுத்தது ஆனாலும் வறுமைத்தீ எரித்தவண்ணமே இருந்தது .

ஆமைவேகத்தில் சென்ற அவரின் வளர்ச்சிக்கு 1947 இல் எடுக்கப்பட்ட “ராஜகுமாரி” முற்றுப்புள்ளி வைத்தது அன்றிலிருந்து அவரே தமிழ்த்திரையுலகின் நிருத்திய சக்கரவர்த்தியானார், புலியாகவும் பசுவாகவும் பாத்திரங்களுக்கு ஏற்ப மாறுதல் காட்டி மக்களின் மனங்களில் வானுயர்ந்த நட்சத்திரமாய் மின்னினார் .

“ராஜகுமாரி” படத்தில் கதாநாயகன் வேடம் அவருக்கு கிடைத்தது வாள்ச்சண்டையில் அழகையும் சுறுசுறுப்பையும் ஒரு புதிய நாயகனிடமிருந்து தமிழர்கள் கண்டாரĮ 1;கள் அலட்டாமல் இயல்பாக நடிப்பதையும் பார்த்த தமிழர்கள் கைகள் ஒலி கிளப்ப விரல்கள் வாயுக்குள் சென்று அவர்களை அறியாமலே சீட்டியடிக்க அன்றிலிருந்து அவரை திரையில் காணும் இன்றுவரை இரசிகர்களின் எழுச்சிக்கோலம் ஆனந்தம் தொடர்கின்றது .அவரின் காலத்திலிருந்து இன்று வரை எத்தனையோ

நடிகர்கள் வந்து சென்றுவிட்டார்கள் ஆனால் அவரின் இடம் யாரும் நெருங்க முடியாத எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் உள்ளது பூவுலகைவிட்டு அவரின் பொன்னுடல் சென்ற பின்பும் அவரின் புகழ் ய&லி 3006;ராலும் அழிக்கமுடியாத இமயமாய் உயர்ந்து பரந்து கிடக்கின்றது தமிழர்கள் இதயமெங்கும்.

இளமையில் தான்பட்ட கொடிய வறுமை எந்தக்குழந்தைக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்திலே சத்துணவுத்திட்டத்தை கொண்டுவந்து அதை வலிமையாக்கி பேணினார் , தனது தாயார் உடுபுடவைக்கு பட்ட துன்பத்தை எண்ணி நாட்டிலிருக்கும் ஏழைப்பெண்களுக்கு அவ்வப்போது புடவைகள் வழங்கி மகிழ்ந்தார்.

மழை பெய்தால் தனது வண்டி ஓட்டுனருடன் வண்டியுக்குள் சிறிய கடையையே வைத்திருக்குமளவுக்கு அத்தியாவசியப்பொருட்களை வைத்து ஏழைகள் நிரம்பிய
பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கஏற்பட்டிருக்கும் உடனடித்தேவைகளை தனியொரு மனிதனாக நின்று நிவர்த்திசெய்தார்.

அரசாங்கம் கணக்கு பார்த்து உணவு கொடுக்கும் முன்னரே மக்களுக்கு தனது சொந்தப்பணத்தி உணவு செய்து கொடுத்தார்,தனது பணத்திலே இலவசமாக ஏழைகளுக்கு நோய்தீர்க்க மருத்துவ மனைகள் கட்டினார்

இப்படி நாளும் பொழுதும் மக்களுக்காகவே சிந்தித்து செயலாற்றியதனால் மக்கள் அவரை தமிழகத்தின் முதல்வராக்கி அழகு பார்த்தார்கள். மூன்றாம் வகுப்புத்தான் படித்தார் மூன்று முறை தொடர்ந்து முதல்வரானார்.

அரசியல் நெருப்புக்குள் கருகாமல் இருவிரலசைத்தபடி எதிரிகளை குப்புறப்படுக்கவைத்தார் , நோயின் காரணமாக ஒரு தேர்தலில் தொகுதிக்கு செல்ல முடியவில்லை ஒலிவாங்கியை பிடித்து பேசவுமில்லை அவர் படுத்துக்கிடந்தார் மக்கள் அவரை வெற்றிபெற வைத்தனர்.

எம் ஜி ஆரை ப்போல் ஒருவர் சொல்லடி – இகழ்வான பேச்சுக்கும் ஆளாகி இருக்கமாட்டார், ஆனால் அவரோ தூற்றுதல்களையெல்லாம் போற்றுதல்களாக்கினார் தூற்றியவர்கள் இன்று போற்றுமளவுக்கு ; வாழ்ந்து காட்டினார் , அவரின் அதிசிறந்த தன்மை பிறரின் துன்பத்தை தன் துன்பமாக கருதி அந்த துன்பம் போக்க வழிசெய்வது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது,ஒரு நினைவு –

கோவையில் கூட்டம் பேசிவிட்டு அவரை இரவு விருந்துக்கழைத்தவரிடம் சென்று பசியாறி
இரவோடு இரவாக சென்னை கிளம்புகின்றார் திடீரென எல்லா வண்டிகளிலும் வந்த தொண்டர்களை இறங்க சொல்லி உட்கார்த்துகின்றார் தனது வண்டியிலிருĪது தானே இலைகளை எடுத்து கொடுத்து தாயன்புடன் தொண்டர்களுக்கு இட்லி பரிமாறுகின்றார் தொண்டர்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் அழுது நனைகின்றார்கள் ஆற்றி உண்ண வைக்கின்றார் பயணம் இனிதே தொடர்ந்தது.

கோவை நண்பர் தன்னை கவனிக்கும் நிலையில் பரபரத்து பதறியதால் மற்றும் உடனடியாக தேவையால் தொண்டர்கள் உணவருந்தாதை எண்ணியவர் இரகசியமாகவே தொண்டர்களின் பசிக்கு புசிக்க ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த மனிதாபிமானமே அவரை என்றும் வணக்கத்துக்குரிய தெய்வமாக்கியது. பிறர் உணர்வுகளை மதியாது அலட்சியப்படுத்தும் மாந்தர்கள் எம் ஜி ஆர் வழி நடந்து நல்ல பேரை வாங்கவேணடும்.

அவர் பற்றி எழுதுவதென்றால் ஏடு கொள்ளாது தமிழகத்தில் ஓடும் ஆறுகளுக்கெல்லாம் ஒரு முடிவுண்டு பொன்மனச்செம்மலின் வரலாற்றை இத்துடன் எ ன்று முடிக்க முடியாது காரணம் அவரின் புகழாறு இன்னும் ஓடிக்கொண்டே இருக்கின்றது .

நல்லவர்களை என்றும் போற்றுவோம்
நன்றிதனை என்றும் மறவோம்.

One Response to “ஈரமான நெஞ்சம் கொண்டார் ஈழவர் நெஞ்சில் நிறைந்தார்.”

  • பலெர்மோ. த .சங்கர்:

    பல களம் ஓடி மறைத்தலும் உங்கள் நினவுகம் எம் நினைவில் இருத்து மறையாது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்