உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மரணத்தை வரவழைக்கும் வியாதி தான், மாரடைப்பு மரணம். நன்றாக உடற்பயிற்சி செய்பவர், புகை பிடிக்காமல், மிகவும் ஒழுக்கமாக உள்ளவருக்கு எப்படி மாரடைப்பு வந்தது என ஆச்சரியப்படுகிறோம். மூன்றில் இரண்டு பேருக்கு மாரடைப்பு, எந்த அறிகுறியும் இல்லாமல் வருகிறது. இது பல ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்வி. இந்த கேள்விக்கு இன்று பதில் கிடைத்து விட்டது.
மாரடைப்புக்கு காரணமான கரோனரி ரத்த குழாய் அடைப்பை அறிய, “ஐ-சென்சிடிவ் சி ரியாக்டிவ் புரோட்டின்’ என்ற பரிசோதனை, கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், முப்பரிமாண ஸ்கேன்கள், சில நொடிகளில் படம் எடுத்து கரோனரி ரத்தக்குழாயின் 90 சதவீத அடைப்பை காட்டிவிடும். உலக அளவிலான இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர், இந்தியாவில் உள்ளதாக உலக கருத்தரங்குகளில் கூறப்பட்டுள்ளது. இந்த 60 சதவீத இந்தியர்களில், 30 சதவீதம், 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். மீதி 35 சதவீதத்தினர், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். மூன்றில் ஒரு பங்கினர் வலி இல்லாமல், டாக்டர்களால் மருத்துவமனைக்கு அழைத்து செல்பவர்கள். ஒரு பகுதியினர், தாங்க முடியாத மார்பு வலி ஏற்பட்டு, மரணம் அடைகின்றனர். மார்புவலி கண்டவர், 60 முதல் 90 நிமிடங்களுக்குள், அனைத்து வசதிகளும் கொண்ட மூன்றாம் நிலை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மூன்றாவது நிலை மருத்துவமனையில் கேத்லேப் வசதி மற்றும் பை-பாஸ் சர்ஜரி செய்ய வசதிகள் உண்டு. மாரடைப்பு கண்டவர்களுக்கு, சில பரிசோதனை முடிந்தவுடன், கேத்லேப் சென்று கை வழியே கரோனரி ஆஞ்சியோகிராம் செய்து, அடைப்பை கண்டுபிடித்து, உடனடியாக ஸ்டென்ட் சிகிச்சை அளித்து, 6 மணி நேரம் வைத்திருந்து, 8 மணிநேரத்திற்குப் பின் வீடு சென்று விடலாம். 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அனுப்புவது மகத்தான புரட்சி.
பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி: இச்சிகிச்சை முறை முடிந்து, நோயாளி மூன்று நாட்களில் வேலைக்கு செல்லலாம். இதனால் ஏற்படும் நன்மைகள்: குழாய் அடைப்பால் ஏற்படும் இதய தசைகளின் சேதத்தைக் கட்டுப்படுத்தி, இதய வீக்கத்தை தடுக்கலாம். மாரடைப்பு ஏற்பட்ட 6 மணி நேரத்துக்குள்ளாக ரத்தக் குழாயிலுள்ள ரத்தக் கட்டியை ஊசி மூலம் கரைத்து விட வேண்டும். நீண்டநாட்களாக ரத்த அடைப்பை சரி செய்யாவிட்டால், இதயத்திற்கு ரத்தம் கிடைக்காமல் வீங்கி, இதயச் செயலிழப்பு ஏற்பட்டு விடும். பிறகு படுத்த படுக்கையாக நேரிடும். எனவே, உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும்.
இன்றுள்ள புதிய இதய பரிசோதனை கருவிகள்:
* 64 சி.டி., மற்றும் 124 சி.டி., ஆஞ்சியோகிராம். துல்லியமாக, கரோனரியில் ஏற்படும் சிறிய அடைப்பைக் கூட காட்டி விடும். இந்த வசதியால், பெரிய அடைப்பாக மாறுவதற்கு முன், சிகிச்சை பெற்று விடலாம்.
* இதய எம்.ஆர்.ஐ., ஸ்கேன். இதுவும் இதய பரிசோதனையின் மைல் கல்.
* பெட் ஸ்கேன்
* மலிவான கலர் பிப்ளர் பரிசோதனை
இது போன்ற பல உயிர் காக்கும் கருவிகள், இதய நோயாளிகளுக்கெனவே வந்துள்ளன. இவற்றை நம்பி, மூன்றாம் நிலை மருத்துவமனைகளை நாடிச் சென்றால், நிச்சயமாக உயிர் காத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்