தமிழில் எழுத
பிரிவுகள்


அவுஸ்ரேலியா தடுப்பு முகாமில் தங்கியிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும், சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இதுவரை அவரின் உறவினர்கள் முன்வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

தயாரத்த ஜயசேக்கர என்ற குறித்த இளைஞர் தனது முகவரியாக மட்டக்களப்பின் இரண்டு பிரதேசங்களைக் குறிப்பிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமாயின் தமது கொன்சியூலர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறித்த இளைஞரின் உறவினர்களுக்கு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்