உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இந்தோனேசியாவில் உள் மொலுக்காஸ் தீவில் இன்று ‘திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. டெர்னேட் என்ற இடத்தின் வட கிழக்கே 146 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த அந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.

ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல, அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அலுதியான் தீவுகளிலும் இன்று இலேசான நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்