உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இன்று 22 01 2012 அதிகாலை வேளை வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர் அங்கிருந்த இரு பெண்களையும் கட்டிவைத்து விட்டு மணிக்கணக்கில் வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தி அங்கிருந்த 11 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் நவீனரக தொலைக்காட்சி ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

அங்குநின்ற வளர்ப்பு நாய் ஒன்றையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக்குள் போட்டுவிட்டு அவர்கள் சென்றுள்ளனர்.

சுன்னாகத்தில் உடுவில் சபாபதிப்பிள்ளை வீதியில் உள்ள நாகேந்திரன் என்பவரது வீட்டிலேயே நேற்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

வீட்டிலிருந்த இருவரையும் வெளியே அழைத்து கதவைப் பூட்டிவிட்டு பரிசோதனைக்குட்படுத்தினர். கொள்ளையர்கள் வீட்டில் நின்றிருந்த நாயொன்றையும் கழுத்து வெட்டிக் கொலை செய்து வீட்டின் அறையொன்றில் வீசியுள்ளனர்.

கறுப்பு நிறத் துணியினால் முகத்தை மறைத்துச் சென்ற நால்வர் இந்தக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலை காணப்பட்டது. இந்த வீட்டுக்கு அண்மையில் இராணுவக் காவலரண் ஒன்றும் உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் நேற்றுப் பிற்பகல் வரை பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 11 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் தொலைக் காட்சி திருட்டுப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தாலும் சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டு உரிமையாளரான வர்த்தகர் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் இந்த முகமூடிக்கும்பல் அங்கு தமது கைவரிசையைக் காட்டிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஹங்கநாத், இது தொடர்பான மேலதிகவிசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்