உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை கண்டித்து திபெத்தியர்கள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்தாண்டு மார்ச் முதல் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாகாணத்தில் மட்டும் இதுவரை 13 புத்தமதத் துறவிகள் தீக்குளித்து பலியாகியுள்ளனர்.

அம்மாகாணத்தின் கான்ஜி வட்டத்தில் உள்ள லூவூஹோ பகுதியில் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் அரசு அலுவலகங்களை நோக்கி ஊர்வலமாகச் சென்றதாகவும், அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியானதாகவும் ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை திபெத்திய போராளி அமைப்பும், லண்டனைச் சேர்ந்த மற்றொரு அமைப்பான ப்ரீ திபெத் அமைப்பும் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்