தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்கள் 6 மீனவ படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

புல்மோடை கடற்பரப்பிற்கு வடக்காக இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தமது மீனவப்படகுகள் மற்றும் மீன்களுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முதல்கட்ட விசாரணைகளின் பின் இவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவர் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்