உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மூன்று முறை தற்கொலை முயற்சி செய்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலிப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அராலி வடக்கு, செட்டியார் மடப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான முத்துலிங்கம் இரத்தினகுமார் என்ற குடும்பஸ்தர் தனது வீட்டின் வெளிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் அண்மையிலேயே டுபாய் நாட்டில் இருந்து திரும்பியதாகவும் நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியதாகவும் தெரியவருகிறது.  இருப்பினும் இதுவரையில் மூன்று தடவைகள் தற்கொலைக்காக முயற்சி செய்ததாகவும் நேற்று மாலை தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்