உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சமீபகாலமாக உலகில் நடக்கும் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகளின் தகவல்கள் அதிகமாக வெளிவருகின்றன. பெரு நாட்டில் 3 வயது சிறுவனின் வயிற்றுக்குள் குழந்தையின் கரு இருப்பதாக தகவல் வந்துள்ளதை அந்நாட்டில் உள்ள சிலாவோ நகரை சேர்ந்த மருத்துவர் கார்லோஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து கார்லோஸ் கருத்து தெரிவிக்கையில், இந்த அசாதாரண விளைவு 5 லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படலாம் எனறும், சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவில் மூளை, இருதயம், நுரையீரல், குடல் போன்ற உறுப்புகள் எதுவும் உருவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் அடிப்படையில் ஆய்வுசெய்தால், இரட்டை குழந்தை கருக்குள் தாயின் வயிற்றில் உருவாகி அதில் ஒன்று சரியாக வளர்ச்சி பெற்று குழந்தையாக மாறியதும், மற்றொரு கரு அதனுள் ஊடுருவி வளர்ச்சி பெறாமல் போனதால் இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் விரைவில் சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவை அகற்ற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்