உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலணி மற்றும் கற்களை வீசி தாக்கினர்.

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை கடந்த 40 ஆண்டுகளாக நீட்டித்துக் கொண்டே போகிறது.

இதனிடையே நேற்று ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் எல்லைப்பகுதியான காஸாவிற்கு வருகைப் புரிந்தார். காஸாவில் ஜப்பானின் நிதியுதவியுடன் காஸா எல்லைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி திட்டத்தை பான் கீ மூன் தொடக்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

அவ்வகையில், நேற்று அந்த இடத்திற்கு பான் கீ மூன் வருகை தந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் பான் கீ மூன் வருகை தரும் சாலை வழியில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கோஷமிட்டுனர். சிலர் அவர் வரும் கார் மீது காலணிகளையும் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆயினும், இதனால் பான் கீ மூனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐம்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்