உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஐக்கிய இராஜ்ஜியத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவரை கற்பழித்து அவர் பணிபுரிந்த வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சார்ஜா பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தான் பணிபுரியும் வீட்டில் இலங்கை பணிப்பெண் தனியாக இருந்த வேளை இந்த அசம்பாவிதச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்கள் குறித்த வீட்டில் திடீரென நுழைந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதோடு மேலும் இருவர் தனிமையில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து வீட்டிற்கு வந்த வீட்டு உரிமையாளர் இலங்கைப் பெண்ணின் நிலையை கண்டும் சம்பவத்தை நினைத்தும் அதிர்ந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவள் அழுது கொண்டே இருந்தாள், அவளை சமாதானப்படுத்த எனக்கு நீண்ட நேரம் சென்றது. ´மூன்று இளைஞர்கள் வீட்டினுள் நுழைந்து என்னை கற்பழித்தனர்´ என அப்பெண் என்னிடம் கூறினாள்” என வீட்டு உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

சார்ஜா பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பல வீட்டுக் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் களவாடப்பட்ட பொருட்கள் பலவற்றையும் பொலிஸார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
foto 1 ME in Pretty Pink Roses Dreams - 2zxD0-CQgi - print Untitled-1 Celine_Birthday nnd-1
வாசகர்கள்


முந்தைய செய்திகள்