தமிழில் எழுத
பிரிவுகள்


சுழிபுரம் வடக்கு, காடேறி கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபறோ நகரில் வசித்து வந்தவரும் சதாசிவம் அன் சன் முன்னள் உரிமையளரும் யாழ்- ஐக்கிய வியாபாரச் சங்க வினியோக முகாமையாளராக பணியாற்றியவருமான சதாசிவம் அருணாசலம் அவர்கள் 19.02.2012 அன்று கனடாவில் சிவபதம் எய்தினார். அன்னார், அமரர்களான அருணாசலம் – இலச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்; அமரர்களான துரைசிங்கம் – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகனும்;
மீனாம்பிகை (சரசு) வின் அன்பு கணவரும்; லோகநாதன்,  சிவசிதம்பரம், செல்வராணி, புவனேந்திரம், புவனேஸ்வரி, சரோஜாதேவி, ஆகியோரின் அன்புத் தந்தையும், தவராணி, இந்திராணி, இரத்தினம், சகுந்தலாதேவி, உதயகுமார், தயானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்; அமரர்களான கனகம்மா, ஆறுமுகம், தெய்வானை, மாணிக்கம் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்;
ஏகாம்பரம், நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்
25.02.2012 சனிக்கிழமை காலை 8:30 மணிமுதல் காலை 10:30 மணிவரை அதே FUNERAL HOME ல் ஈமைக் கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும். (தகனம் செய்யப்படும் இடம் பின்னர் அறியத்தரப்பெறும்)

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
துயர்பகிர: 001–416–266-9821 கனடா

11 Responses to “மரண அறிவித்தல் – சதாசிவம் அருணாசலம்”

 • பலெர்மோ. த. சங்கர் குடும்பம்:

  பிரிவால் துன்புற்றிருக்கும் உறவினர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு,
  திரு அருணாச்சலம் சதாசிவம் அவர்களின் ஆத்மா சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி

 • அற்புதன்:

  அன்னாரின் இழப்பினால் துயறுரும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் ,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

 • s.yathavan:

  அன்னார் எமது கிராமத்தின் ஒரு கடின உழைப்பாளி எமது கிராமத்தில் முன்மாதிரியாக வாழ்ந்தவர் .யாரும் மதிக்கத்தக்க பண்புகளை கொண்டிருந்தவர் இவரது பிள்ளைகள் இவரின் பண்புகளை பின்பற்றி வாழ்வது நோக்கக்கூடியதாக உள்ளது மறைந்த இவரை நினைவில் நிறுத்தி குடும்பத்தினரது துக்கத்தில் பங்கு கொள்கின்றேன்

  சு .யாதவன்

 • ம சந்திரன்:

  அமரர் திரு.சதாசிவம் அருணாசலம் அவர்களின் மறைவு குறித்து எமது இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

 • இராமர்,ஜேர்மனி:

  அன்னாரின் இழப்பினால் துயறுரும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் ,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

 • pathmanathan family dk:

  அன்னாரின் இழப்பினால் துயறுரும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் ,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் .

 • k.mugunthan:

  திருவாளர். அருணாசலம் சதாசிவம் அவர்கள் எம்மோடு வாழ்ந்து எமது சமூக வளர்ச்சிக்காக பலவகையிலும் உதவிகள் புரிந்து எமது சமூகத்திற்கு வழிகாட்டியாக இருந்து வந்த அந்த பெருமகனின் மறைவு எமக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.

  அவரின் பிரிவால் துயருறும் அவர்தம் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்ம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும்
  கனடா பண்கலை பண்பாட்டுக்கழகம் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது.

  அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  .பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா

 • theebam.com:

  அமரர் திரு.சதாசிவம் அருணாசலம் அவர்களின் மறைவு குறித்து எமது இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
  …………செ.மனுவேந்தன்

 • rajah:

  அன்னாரின் இழப்பால் துயருறும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு,
  அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல அம்பிகையைப் பிரார்த்திக்கின்றோம்.
  கணேசர் குடும்பம்.

 • அழகரத்தினம் பகீரதன்:

  அன்னாரின் இழப்பால் துயருறும் அனைத்து உள்ளங்களுடனும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

 • சுவிஸ் பண்மக்கள் ஒன்றியம்:

  திரு சதாசிவம் அருணாச்சலம் அவர்களின் பிரிவால் துயருறும் உறவினர் நண்பர்களுக்கு , சுவிஸ் வாழ் பண்மக்கள் இரங்கலைத் தெரிவிப்பதோடு ,
  அன்னாரின் ஆத்மா சாந்திக்காகவும் வேண்டுகின்றோம்.

  பண்மக்கள் ஒன்றியம் சுவிஸ்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்