உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


50 ஆண்டுகளின் பின்னர் பௌத்த பிக்கு ஒருவருக்கு தங்காலை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பௌத்த பிக்கு ஒருவருக்கும் அவரது மாமனாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.விவசாயி ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்தமைக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1962ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி, தல்தூவே சோமாராம என்ற பௌத்த பிக்குவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தென்மாகாணம் தங்காலை, கட்டுவான அம்பகஸ்ரா விஹாரையின் கோமடியே சரண என்ற பௌத்த பிக்குவிற்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளில் சாட்சியமளித்த கோமடியே சரண தேரர், எழுத வாசிக்கத் தெரியாது என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

எழுத வாசிக்கத் தெரியாதவர்களை பௌத்த பிக்குகளாக உருவாக்குவது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என நீதவான் சூரசேன ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்புப் பிரதியை சகல மாஹா நாயக்கத் தேரர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட 19 வயதான மஹாகும்புரே தர்மதாச என்பவரின் சகோதரி ஒருவருடன், கோமடியே சரண தேரர் காதல் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உறவே கொலைச் சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்தது என நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்