உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது ஏற்படக் கூடிய சர்வதேச அழுத்தங்களின் போது, யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் என்பதுடன், இனப் பிரச்சனை தொடர்பில் சிறிலங்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விடயங்களும் முக்கியமானதாக அமையலாம் எனக் கருதப்படுகிறது. அத்தகைய அழுத்தங்கள் ஏற்படுகையில், இனப்பிரச்சனை தீர்வு முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை அடையாளப்படுத்த அரசு எண்ணுகின்றது.

ஆயினும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சம்பந்தனை அழைத்துப் பேசியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் ஜனாதிபதின் கோரிக்கையை, சம்பந்தன் முற்றாக நிராகரித்துள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் ஆரோக்கியமான நிலை காணப்பட்டாலே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்க முடியும் என அவர் உறுதியாக தெரிவித்திருப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்