உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ரியாத்திலிருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணித்த இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இப் பெண்ணிற்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.இவருக்கு சிகிச்சை வழங்குவதற்காக இலங்கை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமான நிலையத்தில் உள்ள வைத்திய பிரிவிற்கு எடுத்துச் செல்லும் போது அப் பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 60 வயதான சல்மா பேடன் பூரி என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதணை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்