உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குரல் எழுப்பி வருகின்றன.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி தமிழகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழக்கிழமை கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரான நிலையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இலங்கையின் போர்க்குற்றம் குறித்து அந்நாட்டின் மீது ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரிக்கும் நிலையில் இந்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இப் போராட்டத்தினால் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 21 பேரை பொலிஸார் கைது செய்தனர். இதனிடையே ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்