உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாட்டு பள்ளி விடுமுறைக்காக சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மாலியா, எவ்வித காயமும் இன்று பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவின் மத்திய மாகாணமான ‌கெரேரோ மாகாணத்தை மையம் கொண்டு, நேற்று பயங்கர நி‌லநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மெக்சிகோவிற்கு பள்ளி விடு‌முறை‌யை முன்னிட்டு சுற்றுலா சென்றிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியா(13).

இவர் தற்போது தென்மேற்கு மாகாணமான ஒக்ஸாகாவில் தங்கியுள்ளார். இப்பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.

எனினும் அவருக்கு எவ்வித காயமுமில்லை எனவும் பாதுகாப்புடன் உள்ளதாக, ஒபாமாவின் மனைவி மிச்செலின் தகவல் தொடர்பாளர் கிறிஸ்டினா ஷக‌ாகோ தெரிவித்துள்ளார், வெள்ளை மாளிகை வட்டார செய்திகளும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்