உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தமிழ்த் தேசிய அரசியலில் சில காலம் எதிரும் புதிருமாகவிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் நேரடி பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம் ஏ சுமந்திரன் ஆகியோர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று நேற்றையதினம் சந்தித்துள்ளனர்.

தமிழ்த் தெசிய கூட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி தனித்தனியாக தமிழ்க் கட்சிகளை பலப்படுத்துவதை விடுத்து தமிழத் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தச் சந்திப்பானது தமிழ்த் தேசிய அரசியரைல முன்னெடுத்து தமிழர் உரிமைகளை வென்றெடுக்ககூடிய ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கினறனர்.

திரு.ஆனந்தசங்கரியுடனான சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்