உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராண்குளம் பகுதியில்  27 செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2.15 மணியளவில் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது .

இதன்போது இரு பஸ்களிலும் பயணம் செய்த சுமார் 10க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்து ஆரையம்பதி வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை தனியார் பஸ் முந்திச்செல்லமுற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பஸ் நடத்துனர்களின் கவலையீனம் காரணமாக விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பயணிகளைப்பற்றி கவனத்தில் கொள்ளாமல் தங்களது வருவாய்க்காக சில தனியார் சாரதிகளும் சில இலங்கை போக்குவரத்துசபை சாரதிகளும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்