உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டியென்று (அன்பியுலன்ஸ் வண்டி) மீசாலையில் பஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் ஏ9 வீதியில், மீசாலை சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது
கிளிநொச்சி மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான இக்காவு வண்டி, யாழ்ப்பாணத்திற்கு சுத்திகரிப்பிற்காக வந்து திரும்பிக் கொண்டிருந்த வேளையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நோயாளர் காவு வண்டியின் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பாக, இச்சம்பவத்தில் காவு வண்டியின் முன்புறமாகவும் பின்புறமாகவும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது..

இச்சம்பத்தில் காவு வண்டியின் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியதோடு, சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புதிதாக நோயாளர் காவு வண்டியொன்று வழங்கப்பட்ட நிலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தால் பாவனையில் இருந்த நோயாளர் காவு வண்டி முற்று முழதாக சேதமடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்