தமிழில் எழுத
பிரிவுகள்


சைபீரியாவிலிருந்து 43 பயணிகளுடன் புறப்பட்ட ரஷ்யா விமானமொன்று இன்று திங்கட்கிழமை வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையிலிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யூமன் என்னும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமே வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

இவ் விமானத்தில் 39 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இந்த விபத்திற்கான காரணம் குறித்து எதுவும் தெரியவரவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்