உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


காரைநகரில் இருந்து யாழ்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து வீதியின் ஓரமாக இருந்த தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று நேற்று மாலை ஆனைக் கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எனினும் மேற்படி பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று மாலை 5.30 மணியளவில் காரைநகரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஆனைக் கோட்டை மானிப்பாய்ப் பகுதியில் வீதியோரமாக நின்ற தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தின் முன் சக்கரம் (சில்லு) திடீர் என்று காற்றுப் போனதன் காரணத்தினாலேயே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை தொலைத் தொடர்பு கம்கம் 5 துண்டுகளாக முறிவடைததுடன் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மற்றும் உடற்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்