Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஐ – போன், ஐ – பாட் இரண்டையும் வாங்குவதற்கு பணமற்றிருந்த 17 வயதுடைய சீன இளைஞன் ஒருவன் தனது ஒரு சிறு நீரகத்தை 20.000 டேனிஸ் குறோணருக்கு விற்றுள்ளார். இவருக்கு சத்திரசிகிச்சை செய்து சிறு நீரகத்தை கச்சிதமாக அப்புறப்படுத்திய வைத்தியர், அவருக்கு துணை போன மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் சுமார் 200.000 குறோணருக்கு சிறு நீரகத்தை விற்க விலை பேசிவிட்டு, இளைஞனுக்கு ஐ – பாட், ஐ – போனுக்காக 20.000 குறோணரை மட்டும் வழங்கியுள்ளனர். தற்போது சிறு நீரகத்தை இழந்து, கடும் சுகயீனமுற்றிருக்கும் இளைஞருடைய அறியாமையை பயன்படுத்தி அவருடைய வாழ்வில் விளையாடிய ஐவரும் தமக்குள் பணத்தை பங்குபோட திட்டமிட்டிருந்தாகவும் தெரியவருகிறது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ -பாட்டுக்கும், ஐ – போனுக்கும் இது பிரச்சாரமாக அமைந்தாலும், தென்கொரிய தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான சம்சூங் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 5.5 பில்லியன் டாலர்கள் அதிக இலாபத்தை உழைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இது இரட்டிப்பு வருமானமாகும். சம்சூங் வெளியிட்டுள்ள கலக்சி எஸ் ஏற்படுத்திய தாக்கமே இந்த வருமான அதிகரிப்பிற்கு காரணமாகும். அதேவேளை நொக்கியாவின் சென்ற ஆண்டு விற்பனை 16 வீதம் வீழ்ச்சியடைந்தது தெரிந்ததே. மேலும் ஐ – போனுக்கு சிறு நீரகத்தை இளைஞன் கொடுத்தது ஒரு சம்பவம். ஐ – போன் டச் புதிய கைத்தொலைபேசி உலகத்தையே கைக்குள் கொண்டு வரப்போகிறது. அதற்காக இளைஞர்கள் உயிர்களை கொடுக்கும் ஆபத்தும் உள்ளதை மறுக்க முடியாது. இதன் விற்பனை இடை நிறுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே..

மேலும் அமெரிக்க ஜெட் விமானமொன்று வேர்ஜீனியா பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் விழுந்து வெடித்து சிதறியது. இந்த நிகழ்வில் ஐந்து வீடுகள் உடைந்து, தகர்ந்து தீப்பிடித்தன. ஆறு பேர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானிகன் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள். குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து, ஒருவரும் மரணிக்காதது அதிசயம் என்று வேர்ஜீனிய நகர மேயர் தெரிவித்தார். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்தை சந்தித்துள்ளது.

ஆபிரிக்க மாலி நாட்டில் சதி மூலம் ஆட்சியை பிடித்த இராணுவ ஜிந்தாக்கள் கடுமையான சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முகாம் திரும்ப சம்மதித்துள்ளார்கள். பழைய அதிபர் தற்காலிக நிர்வாக பொறுப்பை எடுத்தாலும், வரும் 40 தினங்களில் தேர்தலை நடாத்திவிட வேண்டுமெனவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இஸ்லாமிய கடும்போக்கு அன்சடீன் பயங்கரவாதக் குழு, அல் குவைடா பயங்கரவாதக் குழு இரண்டும் சேர்ந்தியங்குவதால் பெரும் குழப்பமான நிலை காணப்படுவதாக டேனிஸ் அமைச்சர் கிறிஸ்டியான் பரிஸ் பாக் தெரிவித்துள்ளார். இராணுவம் முகாமுக்கு திரும்ப சம்மதித்த காரணத்தால் மாலி மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலத்தலாம் என்று ஆபிரிக்க யூனியன் அறிவித்துள்ளது. சிக்கல்கள் தொடர்கின்றன.

மறுபுறம் பிரான்ஸ்சில் இஸ்லாமிய கடும் போக்குடையவர்களை தொடர்ந்து கைது செய்துவரும் போலீசார் விசாரணைகளுக்கு பின்னர் சுமார் பத்துப்பேரை விடுதலை செய்துள்ளார்கள். வியாழன் ஆறு பேரும் வெள்ளி நான்குபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனாலும் அதிபர் தேர்தல் முடியும்வரை இத்தகைய கைதுகள் தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழன் ஒரு அல்ஜீரிய பெண் அவருடைய வீட்டில் இருக்கும்போது ஒன்பது மி.மீ துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி நபர் ஸ்கூட்டரில் தப்பி சென்றுள்ளார். கடந்த 19 மார்ச் 81 வயது நபர் ஒருவரும் இது போல சுடப்பட்டுள்ளார். இவைகளை ஆதாரமாக வைத்து பார்த்தால் இஸ்லாமிய குழுக்கள் முகமட் மராச் கொலைக்கு பழி வாங்க முயல்கின்றன என்பதை உணர முடிவதாக பிரான்சிய உள்நாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்