Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்கிறது அரசு. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் ரீதியான பரிந்துரைகளை நாட்டில் அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சிலவற்றை மாத்திரமே செயற்படுத்த முடியும். எனவே அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிலர் மாகாணசபைகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை கோரி நிற்கின்றனர். ஆனால் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க வேண்டும் என்ற முன்மொழிவானது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்