Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியதாக பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி. அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, பிரியசகி, லவ் டிக்கெட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தாரா மீது பஞ்சாராஹில்ஸ் பகுதி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், எனக்கு நடிகை தாரா சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஆசை காட்டினார். அதன்பேரில் என்னை வரவழைத்து, விபசாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார். அவரிடம் இருந்து தப்பி வந்து இந்தப் புகாரை அளிக்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நடிகை தாராவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நடிகை தாரா ஆந்திர அரசியல் தலைவர்கள், விஐபிக்களுக்கு அழகிகளை சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகை தாராவிடம் இருந்து லேப்டாப், ரகசிய கேமரா, ரகசிய டைரி, ஒரு பெட்டி நிறைய ஆணுறைகள், 8 செல்போன்கள், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். mராஜசேகரரெட்டியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ, 8 செல்போன்கள், 21 சிம் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்