உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கடந்த காலங்களில் செய்யப்பட்ட பல சமரச முயற்சி்களை அனைத்தையுமே மறுத்த  பணிப்புலம் அம்பாள் ஆலயத்தை நடாத்துபவர்கள்  அண்மையில் எமது ஊர் பிரதேசசபை வரை சென்று தங்கள் கோயில் வளவில்   பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் அமைந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார்கள்.  அதன் பிறகு புதிய ஐந்து நிபந்தனைகளளை வழக்கறிஞர் சோ.தேவராசா ஊடாக பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி தற்போது கொடுத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்கள்

  1.  1200 ரூபா வாடகை பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகம்  ஆலயத்தை நிர்வகிப்பவர்களுக்கு கட்டவேண்டும்.
  2.  பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் தனது நிகழ்ச்சிகளை செய்வதானால் ஆலயத்தை நிர்வகிப்பவர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கவேண்டும்.
  3.  ஆலயத்தை நிர்வகிப்பவர்களுக்கு பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் இடையூறுகள் வழங்கக்கூடாது.
  4.  பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய கட்டிடத்துள் மல சல கூடம் அமைக்கப்படக்கூடாது.
  5. பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் அமைந்து இருக்கும் கைப்பந்து விளையாடும் தூண்களை அகற்றபட வேண்டும்.

இந்த விடயங்களை சோ.தேவராசா பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தற்போது தெரியப்படுத்தியுள்ளார் நிர்வாகம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என கருதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.04.2012 அன்று மாலை 6.மணிக்கு பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் இந்த விடயங்களை மக்கள் முன் சமர்ப்பித்து மக்களின் கருத்தை அறியவும் வாக்கெடுப்பை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதே போல் புலத்திலும் இணையங்கள் ஊடாக உங்கள் கருத்துக்களை புலம்பெயர் நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.
அனைத்து பணிப்புலம் மக்களும் விழிப்புடன் இருக்கவேண்டிய காலமாகும். பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் எம்மவர்களின் ஒரு இதயம்போல. அனைத்து பணிப்புலம் மக்களும்   பணிப்புலத்து இளைஞர்களும் தற்போது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.. இது பல விடயங்களுக்கு முடிவை கொடுக்கும்.

தகவல்
பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகசபை.
புலம்பெயர் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகசபை.

One Response to “பணிப்புலம் அம்பாள் ஆலயத்தை நடாத்துபவர்களின் ஐந்து விசேட கோரிக்கைகள்/நிபந்தனைகள்”

  • MAKKALILORUVAN:

    பணிப்புலம் ஆலய தர்மகர்த்தாக்கள் வைத்திருக்கும் 5கோரிக்கைகள் வேடிக்கையானது .அவர்கள் தாங்கள் நினைப்பதை எல்லாம் கேட்பார்கள் ,அதற்கு சனசமூகநிலயம் ஒருபோதும் ஒத்துப்போகக்கூடாது .சனசமூகநிலைய நிர்வாகிகள் தங்கள் வேலைப்பழுவின் மத்தியிலும் பொதுச்சேவைக்கு முன்வந்து உள்ளார்கள் .அவர்களுக்கு மக்களாகிய நாங்கள் தான் ஆதரவு கொடுக்கவேண்டும் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்