உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஷீகன், யுனான், குயூஷிகோ ஆகிய மாகாணங்களில் இன்று அதிகாலை 5.49 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் திடீரென கண் விழித்தனர்.

அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினர். ரிக்டர் அளவில் 5 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக சீனாவின் புவியியல் துறை தெரிவித்துள்ளது. சேத விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.

கடநத 2008-ம் ஆண்டு இதே பகுதியில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 87 ஆயிரம் பேர் பலியாகினர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்