உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிலாபம் பகுதியில் 11 கிலோ கஞ்சாவுடன் ஒருவரும் போலி நாணயத் தாள்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் ரயில் குறுக்கு வீதி காக்கைபள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரே 11 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதோடு அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, 1000 ரூபா போலி நாணயத் தாள்களுடன் குருநாகல் – சிலாபம் வீதியில் வசிக்கும் ஒருவரும் சிலாபம் காக்கைபள்ளியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்