உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கெட்டு போன சிக்கனை சாப்பிட்டதால் மூளை மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமிக்கு உடனடியாக ரூ.43 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கிளைகளை கொண்டு பிரபலமாக உள்ளது கென்டகி ஃப்ரைட் சிக்கன் (கேஎஃப்சி) என்ற நிறுவனம்.

ஆஸ்திரேலியாவில் மோனிகா சமான் என்ற 7 வயது சிறுமி கடந்த 2005ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் சிக்கனை வாங்கி சாப்பிட்டாள். சிறுமிக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டது. இதில் மூளை மற்றும் பக்கவாதத்தால் சிறுமி பாதிக்கப்பட்டாள்.

இந்த நிறுவனத்தில் இருந்து உணவை வாங்கி சாப்பிட்ட பிறகு இந்த பாதிப்பு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனைகளில் உறுதியானது. இதனால் அவளது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவளுக்கு தொடர் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தார்  நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்  கேஎஃப்சி நிறுவனம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக ரூ.43 கோடி நஷ்டஈடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்