உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அட்டாளச்சேனை பிரதான வீதியின் பாலத்திற்கு அருகில் இன்று 30ம் திகதி இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காரை நிறுத்தி வைத்துவிட்டு குறித்த பாலத்திற்கு அருகில் இருவர் கதைத்துக் கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளச்சேனை தவிசாளரின் சகோதரரான மொஹமட் லெப்பை நஜீப் (39வயது) என தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்