Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்தியாவிலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா ஏ-321 விமானம் 148 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் காலை 10 மணியளவில் தனது பயணத்தை தொடங்கி சென்று கொண்டிருந்த
சிறிது நேரத்தில் காரிபூர் சர்வதேச விமான நிலையம் அருகே பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்க எஞ்சினின் அருகே உள்ள இறக்கையில் ஒரு பறவை மோதியது. இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த எரிபொருள் அனைத்தும் கடலில் கொட்டப்பட்டு 40 நிமிடங்களில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

பின்னர் இந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டு அருகில் இருந்த ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானத்தை தொழில்நுட்ப பொறியாளர்கள் பரிசோதித்து சரிசெய்து வருகின்றனர்.

இதேபோல் இன்று, சென்னையிலிருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானியின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்