உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலா சார்கோசி தோல்வியடைந்தார். இதனையடுத்து புதிய அதிபராக ஹோலன்ட் பதவியேற்க உள்ளார்

பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22 ஆம் திகதி, அதிபர் தேர்தல் நடந்தது. இதில் சார்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்சுவா ஹோலன்ட் போட்டியிட்டார்.

முதல் கட்ட தேர்தலில் வேட்பாளராக 10 பேர் களத்தில் இருந்தனர். இதில் 50 சதவீத வாக்குகள் யாருக்கும் கிடைக்காத நிலையில், நேற்று இரண்டாவது கட்ட தேர்தல் நடந்தது. இதில் சார்கோசியும், ஹோலன்டும் களத்தில் இருந்தனர்.

பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்பின்மை, வரி விதிப்பு, ஓய்வூதியம் குறைப்பு, மறுப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் ஹோலன்ட் பிரசாரம் செய்தார். “மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும்” என, சார்கோசி உறுதியளித்தார்.

இறுதியாக, ஹோலன்ட் 52 வீத வாக்குகளைப் பெற்று புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் சோசலிஸ்ட் கட்சி சார்பில் முதல் அதிபர் என்ற பெருமையை ஹோலன்ட் பெற்றார். சார்கோசியின் தோல்வி, ஐரோப்பிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்