தமிழில் எழுத
பிரிவுகள்


தென் பிலிப்பைன்ஸிலுள்ள சுப்பர் மார்க்கட்டொன்றில் இன்று புதன்கிழமை அதிகாலை தீ பரவியதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

தென் பிலிப்பைன்ஸிலுள்ள புட்டுவன் பகுதியிலுள்ள 3 மாடிகளைக் கொண்ட கடைத்தொகுதியிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டது.

இப்பல்பொருள் அங்காடியில் உறங்கிக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தீ விபத்து ஏற்பட்ட வேளையில் சுமார் 21 பேர் அக்கட்டிடத்தில் இருந்துள்ளனர்.

கடும் புகை காணப்பட்டதாகவும் அப்பெண்களால் வெளியேற முடியவில்லையெனவும் பொலிஸார் கூறினர். 3 பேர் யன்னலின் ஊடாக பாய்ந்து தப்பித்துக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்