உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணம் போதனா வைத் திய சாலையில் அமைந்துள்ள இதய சிகிச்சை விடுதி (Cardio -logy Ward)தற்காலிகமாகச் செயலிழக்கும் நிலை தோன்றியுள்ளதாக மிக நம்பகமாக அறியப்படுகிறது. இதனை அறிந்து இதய நோயாளர் மிகுந்த மனக்கி லேசமும் கவலையும் அடைந் துள்ளனர்.
ஆனால் இதய சிகிச்சை விடுதியை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். உதயனுக்குக் கிடைத்திருக்கும் தகவல் பிழையானது என்று உறுதிபடத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட விடுதியை இயக் குவதற்குத் தேவையான வைத்திய அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் அதனால் விடுதியை மூடுமாறு கோரிக்கை விடுப்பட் டிருப்பதாகவும் உதயனுக்கு நம்ப கமாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
யாழ். போதனா வைத்தியசாலை யில் இதய சிகிச்சை விடுதி 2008 ஆம் ஆண்டு பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. இந்த விடுதி கடந்த இரண்டு வருடங் களாக இயங்கி வந்தது. இந்த விடுதிக்கென வைத்திய அதிகாரி களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இங்கு கடமையாற்றிய இரு வைத்திய அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டனர். இதனையடுத்து வைத்திய அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த இதய சிகிச்சை விடுதியைத் தொடர்ந்து இயங்கவைப்பதற்கு போதிய வைத்தியர்களை நியமனம் செய்யுமாறு போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
வைத்திசாலையிலுள்ள இதய அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 24 மணிநேரமும் வைத்தியர்கள் கடமை யில் இருக்கவேண்டும். தற்போது உள்ள வைத்தியர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சுழற்சி முறை யில் கடமையாற்ற வேண்டி யுள்ள தாலும், கிளினிக்குக ளில் நோயா ளர்களைப் பார்வை யிட வேண்டி உள்ளமையினா லும் இதய சிகிச்சை விடுதியில் பணியாற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
இதய சிகிச்சை விடுதி தற்காலிகமாக மூடப்படுமானால் அதனால் தாமே பெரிதும் பாதிக்கப்படுவர் என இதய நோய்க ளுக்கு ஆளானவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்